அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்யும் இந்தியா

130

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 243 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 101 ஓட்டங்களை பெற்றதுடன் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கார் படைத்திருந்த சாதனையைும் சமன் செய்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கார் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை பெற்றுள்ள நிலையில், அதனை இன்றைய தினம் விராட் கோலி சமன் செய்துள்ளார்.

அதேநேரம் Shreyas Iyer 77 ஓட்டங்களையும் Rohit Sharma 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் Lungi Ngidi, Marco Jansen, Kagiso Rabada, Keshav Maharaj, Tabraiz Shamsi ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பின்னர் 327 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 83 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணியின் அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Ravindra Jadeja 5 விக்கெட்டுக்களையும் Mohammed Shami மற்றும் Kuldeep Yadav ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here