follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Published on

2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின் கீழ் உள்ள கல்வி அமைச்சினாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த அனைத்து நிதிகளையும் ஒன்று சேர்த்தே அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கும் முழுமையான தொகையைக் கணக்கிட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

“நாட்டில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக புதிய தவணைக்காக இந்த வருடம், மார்ச் மாதம் பாடசாலைகளை கால தாமதமாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்தத் தாமதங்களைக் குறைத்து 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படும். அதன்படி, அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். இதன் ஊடாக 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை வழமை போன்று நடத்த முடியும்.

மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் காணப்பட்டாலும் கூட அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என்று நான் நினைக்கின்றேன். நேரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, தற்போது தாமதமாக நடத்தப்படும் அனைத்துப் பரீட்சைகளையும் கட்டம் கட்டமாக நடத்துவதன் மூலம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டாகும் போது குறித்த வருடத்திற்குரிய பரீட்சைகளை அதேவருடத்தில் நடத்தி முடிக்க அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோன்று, 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடத்தி முடிக்கப்பட்ட சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளது என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...