வங்கியில் இருந்து 2 மில்லியன் டொலர்களை எடுக்க கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் முயற்சி

257

சுதந்திர சதுக்கத்தில் உள்ள இலங்கை வங்கிக் கணக்கில் இருந்து 2 மில்லியன் டொலர்களை பெறுவதற்கு கிரிக்கெட் சபை உறுப்பினர்கள் முயற்சிப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய போது, கட்சி வேறுபாடுகள் இன்றி முடிந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இந்த அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

சட்டங்கள் குறித்து சிந்திக்க இது நேரமல்ல என்றும், இது இலங்கையின் கிரிக்கெட் நிதி போலவே நாட்டின் நிதி என்பதனால், ஜனாதிபதியுடன் பேசி செயற்பாடுகளை இடைநிறுத்துமாறும், இது பாரதூரமான சம்பவம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் சபை யாருடைய அதிகாரத்தின் பேரில் இதுபோன்ற செயல்களைச் செய்கிறது என்பதைக் கண்டறியுமாறும், இது ஒரு பாரிய பிரச்சினை எனவும், இவ்வாறான கேவலமான செயற்பாடுகளை அனுமதிக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில், அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீடிக்க வேண்டும் என்றும், இதை பிரேரணையாக சமர்ப்பித்து தானே நிறைவேற்றுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here