அரிசி மாபியா- கீரி சம்பா தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்து

573

தற்போது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவது அரிசி மாபியாக்களின் செயற்கையாக உருவாக்கப்பட்ட செயற்பாடுகளே காரணம் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் போதியளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் உள்ள போதிலும், சில அரிசி ஆலை உரிமையாளர்கள் கையிருப்பை மறைத்து வருவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சிறுபோகத்தில் கீரி சம்பா அறுவடை குறைவடைந்திருந்தாலும், அதற்கு முன்னதாக பெரும்போகத்தில் செய்யப்பட்ட அறுவடையில், கீரிசம்பா கையிருப்பு தற்போதைய காலத்திற்கும் போதுமானதாக காணப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு ரகசியமாக விற்கும் மோசடியில் பல வியாபாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here