மருந்து இறக்குமதி – வருடாந்தம் பெருமளவு பணம் விரயம்

137

திடீர் கொள்வனவுகள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதில் இடம்பெறும் ஊழல்கள் காரணமாக வருடாந்தம் பெருமளவு பணம் விரயமாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக இவ்வாறான ஊழல் நடவடிக்கைகளினால் வருடாந்தம் முப்பது நாற்பது பில்லியன் ரூபா வீண் விரயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வருடத்திற்கான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் 180 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், முறையான முறைமைக்கு அமைவாக மருந்துகளை இறக்குமதி செய்தால், அதற்கு இவ்வளவு செலவு ஏற்படாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே கூறுகிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here