உள்ளூர் வீட்டு பணிப்பெண்களுக்கு புதிய வேலைத்திட்டம்

500

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள வீட்டுப் பணிப்பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூக்குரலிடும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல இருந்த போதிலும், குறைந்த சம்பளத்திற்கு அடிமைகள் போன்று பணிபுரியும் உள்ளூர் வீட்டு வேலையாட்கள் தொடர்பில் குரல் எழுப்புவதில்லை. இதற்கான தீர்வை வழங்கி அவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்பபடுத்தப்படுவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

முறைசாரா ஊழியர்களுக்கு தொழில் கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதற்காக ‘கரு சரு’ வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுப்பணிப்பெண்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

வீட்டுப் பணிப்பெண் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தொழில் கௌரவத்தை சட்ட ரீதியில் பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களுக்கு ஏனைய தொழிலாளர்களுக்கு உள்ள ஊழியர் சேமலா நிதி உள்ளிட்ட நன்மைகளை வழங்கி தொழில் பாதுகாப்பை உரித்தாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே கரு சரு வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கையில் EPF ,ETF ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 25 இலட்சமாகும். அதாவது முதலாளிமாருக்கும் ஊழியர்களுக்குமிடையில் நேரடி தொடர்பு இல்லாதவர்களே இதற்கு பங்களிப்பு செய்கின்றனர்.

முறைசாரா சேவையில் ஈடுபட்டுள்ளோரினால் முன்வைக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொழில் கௌரவம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 142 விதிகளுக்கு அமைந்ததாக வடிவமைப்பதே தொழில் அமைச்சின் நோக்கமாகும். இவை வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் இந்த விதிகளுக்கு மாறாக செயல் படுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

வெளிநாடுகளில் வீட்டுப்பணிப்பெண்ணை பணிக்கு அமர்த்தவிரும்பும் ஒருவர் அதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டும். இதே போன்ற நடைமுறை நமது நாட்டிலும் இருக்க வேண்டும். தொழில் ரீதியிலான அனுமதி பத்திரம் வேண்டும். இதற்கு வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கு வீட்டுப்பணிப் பெண் NQV தரம் ஒன்று இரண்டு மூன்று என்ற தொழில் தகுதி நிலைக்கு தகுதிக்கு வழிவகை செய்து கொடுப்பதே எமது நோக்கமாகும் எனவே, இந்த விடயங்களை விரிவுபடுத்தி அனைத்து உழைக்கும் மக்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு கட்டமைப்பை தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்குமாறு அமைச்சரவைக்கு பரிந்துரைத்தோம். 6 மாதங்களுக்குள் இந்த வேலைத்திட்டத்தை அமைச்சரவை முன்வைக்க வேண்டும் என்று அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here