இலங்கை சுங்கம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

173

இலங்கை சுங்கத்தின் பல நிர்வாகப் பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள் கோபா குழுவில் புலப்பட்டன.

இலங்கை சுங்கத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன.

இலங்கை சுங்கம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, தற்போது தரவுகளை பேணுவதற்கு “ASYCUDA” என்ற அமைப்புப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அது RAMIS அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்ப முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன்களைப் பரிசீலனை செய்வதற்காகக் கொள்வனவு செய்யப்பட ஸ்கேன் இயந்திரம் மூலம் எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தை அடைய முடியாமல் போனமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பான முழுமையான அறிக்கையை கோபா குழுவுக்கு வழங்குமாறு குழு பரிந்துரை வழங்கியது.

சுங்கம் வசம் உள்ள விடுவிக்கப்படாத வாகனங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here