follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1இன்று வரவு செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு

இன்று வரவு செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு

Published on

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் 7வது நாளான இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இன்று வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...