பொருளாதாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவருடைய உரிமைகளையும் பறிக்க இன்று கூக்குரலிடும் ஒவ்வொருவரும் அன்று நடந்து கொண்ட விதம் தொடர்பில் தமக்கு நன்றாக நினைவில் இருப்பதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி, குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டதும் உடனே பதில் சொல்ல வேண்டும் என்ற தேவை தமக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவதூறு பரப்புவோரின் கைகளில் நிச்சயம் சேறு பூசப்படும் என்றும், யாரோ ஒருவரின் உரிமையைப் பறிப்பதாகப் பேசுபவர்கள் முதலில் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.