follow the truth

follow the truth

June, 2, 2024
Homeஉள்நாடுமுடிந்தால் தேர்தலை நடத்துங்கள் - ஜனாதிபதிக்கு சவால் விடுத்த சஜித்

முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் – ஜனாதிபதிக்கு சவால் விடுத்த சஜித்

Published on

225 பேரின் வாக்குகளை விட நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை மதிப்புமிக்கது என்றும், ஜனாதிபதியின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைத்த போதிலும், 220 இலட்சம் பேரினதும் ஆணை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதிக்கு இருந்தால், முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தல் ஆணைகளுக்கு மாறாக நாட்டு மக்களின் உண்மையான ஜனநாயகமே இப்போது முக்கியமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள வழக்கு எண்ணை தவறுதலாக குறிப்பிடும் போது அதன் உள்ளடக்கத்தைப் பற்றி சிந்திக்காமல் வழக்கு எண்ணை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் கூறுவது வெட்கக்கேடானது என்றும், வழக்கு எண் மாறினாலும், நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களின் பெயர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியை நியமித்த 134 பேருக்கும் சரியாக ஒன்றை வாசித்து புரிந்து கொள்ள முடியாது என்றாலும், அதனை வாசித்து புரிந்து கொள்ளும் திறன் ஜனாதிபதிக்கு இருந்தாலும், ஜனாதிபதியை நியமித்த 134 பேருக்கும் முட்டாள்தனமான திருப்தியை வழங்க அதே காரணத்தை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டமை வருந்தக்க விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த போது ‘மஹிந்த திருடன் எமக்கு வேண்டாம்’ என கூறி கத்தினாலும், திருடன் என்று அழைத்த நபருடன் பிறந்தநாள் கேக் வெட்ட ஜனாதிபதி சென்றார் என்றும், ஜனாதிபதி தற்போது மக்கள் அபிப்பிராயம், மக்கள் ஆணையை புறம் தள்ளி, தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுத்து செயற்பட்டு வருவதாகவும், ஜனாதிபதியின் பொறுப்புகள் பற்றி பேசினால் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது அவரின் பொறுப்பாகும் என்றும், இவ்வாறு மக்கள் ஆணையை உரசிப்பார்க்க வாய்ப்பு கிடைக்குமாயின், கிடைக்கும் மக்கள் ஆணையின் கீழ் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

களு கங்கையை அண்டிய மக்களின் கவனத்திற்கு

அலகாவ பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் 12.38 மீற்றராக உயர்ந்து பெரும் வெள்ள நிலைமையாக உருவாகியுள்ளதாக நீர்ப்பாசன...

வெள்ளத்தில் மூழ்கிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்

அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெல நுழைவாயிலில் உள்ள பியகம நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவெல நுழைவாயிலை பயன்படுத்தவோ...

களனிவெளி ரயில் பாதையில் பாலம் இடிந்ததில் ரயில் சேவைகள் மட்டு

வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி பாதையின் புகையிரத போக்குவரத்து வாக...