வெளிநாட்டுத் திரைப்படங்களின் பொதுக் கண்காட்சிக்கான சட்டப்பூர்வ உரிமத்தைப் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்க வெகுஜன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கட்டணங்கள் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு திரைப்படத்தை நாட்டில் திரையிடுவதற்கு சட்டப்பூர்வ உரிமம் பெற விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் 40,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்டது.
புதிய திருத்தத்தின் பிரகாரம் 30,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொதுத் தோற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை பொதுத் தோற்றக் கட்டுப்பாட்டு கட்டளைச் சட்டமாக திருத்துவதற்கும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.