அஸ்வெசும கடமையை மேற்கொள்ளும் கிராம உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு

274

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் 18வது அமர்வு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது.

இதில் ‘அஸ்வெசும’ நலன்புரித்திட்டத்தின் மேன்முறையீட்டு நடைமுறைகள் மற்றும் அதன் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கிராம உத்தியோகத்தர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீட்டு நடைமுறை மற்றும் அதன் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் கிராம உத்தியோகத்தர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு முதலில் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஊடாக உத்தியோகத்தர்களின் பிரமாணக் குறிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுடன் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்கள் நடத்தும் கலந்துரையாடல்களுக்கான வசதிகளைச் செய்துகொடுக்கத் தேவையான ஒருங்கிணைப்பை வழங்குவதற்கு வழிவகைகள் பற்றிய குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அஸ்வெசுமத் திட்டத்தில் பணியாற்றும்போது கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர்களுக்கான பொறுப்பை எழுத்துமூலம் வழங்குவது, அஸ்வெசும தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அதிகாரத்தை வழங்கும்போது சட்ட ரீதியாக அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கூடிய சட்டத்தின் 21 மற்றும் 22வது பிரிவுகளைப் பரிசீலித்து நீக்குவது தொடர்பில் கருத்திற்கொள்ளுமாறு குழுவின் தலைவர் இங்கு பரிந்துரை வழங்கினார். இவ்வாறான திட்டங்களுக்கான அளவுகோல்களைத் தயாரிக்கும்போது அடிமட்டத்திலிருநு்தும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here