தற்போதைய அரசாங்கமும் பொருத்தப்பாடுகள் இன்றி அமைச்சுக்களை பிரிக்கும் வேலையையே செய்தது

182

பொருளாதார ரீதியாக வங்குரோத்தான நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மை,கடன் நிலைத்தன்மை பற்றி பேசுவது போலவே சுற்றாடல் குறித்த நிலைத்தகு தன்மையையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றாலும், தற்போதைய அரசாங்கம் நீதி மற்றும் நிலைத்தகு தன்மை குறித்து பேசுகிறது என்றும், தற்போதைய அரசாங்கம் நியமிக்கப்பட்ட பின்னர் 3 தடவைகளில் சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் துறை தொடர்பான 3 அமைச்சர்களை மாற்றியமைத்ததில், நீதி மற்றும் நிலைத்தகு தன்மை குறித்து பேச முடியுமா என்பது சிக்கலாக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்சமயமும், சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் துறை தொடர்பாக 2 அமைச்சுகள் உள்ளன என்றும், இதனால் ஒரே அமைச்சின் கீழ் இந்த 2 அமைச்சுகளும் இல்லாத நிலையில் சுற்றாடல் நீதி மற்றும் நிலைத்தகு தன்மை குறித்து பேச முடியாது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் இந்த 2 அமைச்சுக்களையும் இணைத்து ஒரு அமைச்சின் கீழ் செயற்பட வேண்டும் என்பதே தமது கருத்து எனவும் அவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று கூறினாலும், ஆட்சிக்கு வந்தவுடனேயே பல்வேறு நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டன என்றும், தற்போதைய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் அது மாறும் என நினைத்தாலும், அது அவ்வாறு மாறவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சுற்றாடல், வன ஜீவராசீகள் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான ஒதுக்கீட்டு சட்ட மூலம் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று(27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here