பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு

416

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியான விசேட அதிரடிச் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த சோதனை நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 15 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து முக்கிய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகள் ஆய்வு செய்யப்படும் வனவும் மற்றும் காலாவதியான பொருட்கள் சந்தைக்கு வராமல் இருக்க சோதனை எம்ர்கொள்ளப்படும் எனவும் ஆடைகள், இலத்திரனியல் மற்றும் பிற அத்தியாவசிய மற்றும் நீடித்த பொருட்களை விற்கும் அனைத்து விற்பனை நிலையங்களையும் உன்னிப்பாக கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here