follow the truth

follow the truth

December, 14, 2024
Homeஉள்நாடுபயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ள கூகுள்

பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ள கூகுள்

Published on

2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது.

கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, YouTube, Google Photos, Google Maps, Calendar, Google Slides, Google Sheets உள்ளிட்ட கூகுளின் பல்வேறு தளங்கள் மற்றும் செயலிகளை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், Google நிறுவனம் 2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள Google கணக்குகள் நிரந்தமாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கணக்குகளை நிரந்தரமாக நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை தொடங்கவுள்ளதால், கூகுள் பயனர்கள் இந்த வார இறுதிக்குள் தங்கள் கணக்குகளில் கடவுச்சொல் உள்ளிட்ட விபரங்களை அளித்து உள்ளீடு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

​​இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டுகள் – மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு

இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பாவனைக்கு பொருத்தமற்ற 75,000 கிலோ அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத்...

இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...

இந்திய ரயில் எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்காக பயன்படுத்த திட்டம்

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்கும், பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த முடியுமென இலங்கை...