இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் உறுப்பினர்கள் இருவர் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
அணியின் உடல் செயல்திறன் மேலாளராகப் பணியாற்றிய கிராண்ட் லுடென் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டாகப் பணியாற்றிய கிறிஸ் கிளார்க் – ஐரோன்ஸ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.
ஜனவரி 11, 2021 முதல் இலங்கை கிரிக்கெட்டின் உடல் செயல்திறன் மேலாளராக கிராண்ட் லுடனை இலங்கை கிரிக்கெட் நியமித்திருந்தது.
இலங்கை கிரிக்கெட்டில் இணைவதற்கு முன்னர், 2014 முதல் 2019 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக தனது சேவைகளை வழங்கியுள்ளார்.
அதற்கு முன், கிராண்ட் லுடன் 2008 மற்றும் 2013 க்கு இடையில் பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு தனது சேவைகளை வழங்கினார்.
இலங்கை கிரிக்கெட்டில் இருந்து இராஜினாமா செய்த மற்றைய உறுப்பினர், அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கிறிஸ் கிளார்க் அயர்ன்ஸ், 2023 ஜனவரி 1 முதல் தனது பதவியை ஏற்றுக்கொண்டவருமாவார்.