மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனவரி 24 கோபா குழுவிற்கு

133

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பான கலந்துரையாடல் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இடம்பெற்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பில் அதன் செயற்பாடுகள் மற்றும் வரவுசெலவுத்தித்திட்டத்தின் மூலம் இந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வாறு செலவு செய்யப்படுகின்றது என்பது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இவ் ஆணைக்குழுவிற்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் தற்போது வரை தீர்வு வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, தற்பொழுது தீர்வு வழங்கப்படாத முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை குழு சுட்டிக்காட்டியது.

மேலும், 2024 ஜனவரி 24 ஆம் திகதி இவ் ஆணைக்குழுவை மீண்டும் கோபா குழு முன்னிலையில் அழைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here