பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண்ணுக்கு பிணை

499

போலி கல்வி நிறுவனமொன்றை நடத்திச்சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதான யுவதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று(05) நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்களை ஒன்லைன் ஊடாக இணைத்து, செயலமர்வுகளை நடத்தி, போலியான டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதற்காக மாணவர் ஒருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா முதல் 4,45,000 ரூபா வரை அறவிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இதுவரை 43 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ளன.

ஆயிரக்கணக்கானோர் இந்த கல்வி நிறுவனத்தில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த கல்வி நிறுவனம் உள்ளூர் அல்லது சர்வதேச தரம் இன்றியும், தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அனுமதியின்றியும் நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here