ஆழ்கடலில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஆமை ஒன்றின் பாரிய சடலம் இன்று (06) காலை கல்கிஸ்ஸ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சுற்றாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மீனவர்களால் அறிவிக்கப்பட்டதையடுத்து, கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், கல்கிசை பொலிஸ் உயிர்காப்பு திணைக்கள அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் தெஹிவளை பொலிஸ் அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொண்டு அத்திடிய வனவிலங்கு மீட்பு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதேநேரம், கப்பல் விபத்துக்குள்ளான பேர்ல் எக்ஸ்பிரஸில் இருந்து மூழ்கிய வெள்ளை நிற பிளாஸ்டிக் பந்துகளும் கடற்கரையில் குவிந்து கிடப்பதாகவும், இதனால் ஆமைகள் அடிக்கடி இறந்திருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கல்கிஸ்ஸ வெடிகந்த கடற்கரையில் இறந்த மூன்று ஆமைகளின் உடல்களும் குவிந்து கிடப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.