டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரியதும் உலகின் மிகப்பெரியதுமான பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்தை அடுத்த வருடம் 2024 ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளது.
Icon of the Seas என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் Royal Caribbean International நிறுவனத்தினால் இயக்கப்படவுள்ளது.
இந்த கப்பலில் உலகின் மிகப்பெரிய நீர் பூங்கா, 9 நீர்ச்சுழல்கள், 7 குளங்கள் மற்றும் உணவு மற்றும் பொழுதுபோக்கிற்காக நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. 5,610 விருந்தினர்கள் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய வசதிகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.