கட்டாரின் தோஹாவில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டாருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உலக நாடுகள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சரை அவர் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இதன்போது கட்டாரில் உள்ள முக்கிய வர்த்தக நிறுவன தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.