பாராளுமன்றத்தில் உரிய கோரம் இன்மையினால் இன்றைய நாளுக்கான சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாளை (11) காலை 9.30 மணி வரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அஜித் சபாநாயகர் அறிவித்தார்.
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெற்று வந்த நிலையில் பாராளுமன்றத்தில் உரிய கோரம் இன்மையினால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.