நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக எட்டு மாவட்டங்களில் உள்ள 34 பிராந்திய செயலகங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று(11) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல, பசறை, மற்றும் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை அறிவித்தலும், ஹாலிஅல பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் நிலை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் வல்லாவிட பிரதேச செயலகப் பிரிவுக்கான முதல் நிலை அறிவித்தலும் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுக்கான இரண்டாம் நிலை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில் பததும்பர உடதும்பர, உடபாலயத, மெததும்பர மற்றும் கங்கவட கோரலய ஆகிய பிராந்திய செயலகப் பிரிவுகளுக்கான முதல் நிலை அறிவித்தலும், யட்டிநுவர தும்பனை மற்றும் பஸ்பாகே கோரளய ஆகிய பிராந்திய செயலகப் பிரிவுகளுக்கான இரண்டாம் நிலை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன.
கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ மற்றும் குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம ரிதிகம மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளுக்கு முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, அம்பங்கங்க, கோராலய, லக்கல, பல்லேகம மற்றும் நாவுல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதல் நிலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, வலப்பனை மற்றும் ஹகுரன்கெத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் வெலிகேபொல ஓபநாயக்க, அலபத கலவான, குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதல் நிலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.