“ஒருபோதும் ரணிலும் சஜித்தும் ஒன்றிணையாது”

595

இந்நாட்களில் அப்பட்டமான பொய்கள் உலாவருவதாகவும், எதிர்கட்சித் தலைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“.. நான் ஊடகம் என்ற சொல்லினை பாவிக்கப்போவதில்லை. பொய்யான அப்பட்டமான கீழ்த்தரமான வேலைகளை பிரச்சாரம் செய்யும் நிறுவனங்கள் உள்ளன. அவை அரசினால் கப்பம் வழங்கப்பட்டு வழிநடத்தப்படுகிறதா என்ற சந்தேகம்..

அவர்கள் இந்நாட்களில் ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவதாக பிரச்சாரம் செய்கின்றனர். நான் இங்கு ஒன்றை மட்டும் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒருபோதும் ரணிலும் சஜித்தும் ஒன்றிணைந்து பயணிக்காது ஒன்று சேராது, இதனை நான் நாடாளுமன்றிலேயே தெரிவித்துக்கொள்கிறேன். பொய்யான பிரச்சாரங்களை செய்ய வேண்டாம் எனக் கோரிக் கொள்கிறேன்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here