2024ல் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க திட்டம்

196

2024ஆம் ஆண்டில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் திட்டங்கள் தயாரிக்கப்படும்போது அதற்கு சமாந்தரமாக உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் அதிகாரிகள் Home Stay திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் ஆண்டில் செல்வந்த நாடுகளிலிருந்தான சுற்றுலாப் பயணிகளை அதிகம் வரவழைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இலங்கையிலுள்ள மக்கள் சமூகம் தயாராக இருப்பதன் அவசியமும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. சுற்றுலா பயணிகளிடம் பணம் மோசடி செய்வதை நிறுத்திவிட்டு, சுற்றுலா பயணிகளை மரியாதையுடன் வரவேற்பதற்கான கட்டமைப்பு தயார் செய்யப்பட வேண்டும் என்றும் குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here