குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா திட்டம்

263

அவுஸ்திரேலியாவிற்குள் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு வருடங்களிற்குள் அரைவாசியாக குறைக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி 2025 ஜூன் மாதத்திற்குள் 250,000 குடியேற்றவாசிகள் மட்டுமே நாட்டிற்கு வர வாய்ப்பு கிடைக்கும் தெரிவிக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்டுள்ள குடிவரவு அமைப்பினை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம் கொவிட்டிற்கு முன்னரான அளவிற்கு குடியேற்றவாசிகள் உள்வாங்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த சில வருடங்களில் குடியேற்றவாசிகளின் எண்ணி;க்கை என்றுமில்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் வீடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here