உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க பயணமாக உள்ளார்.
அவர் இன்று (12) வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனுடன் கலந்துரையாட உள்ளார்.
இந்த விஜயத்திற்கு முன்னர், உக்ரேனிய ஜனாதிபதி உக்ரேனுக்கு மேலும் இராணுவ உதவி தேவை என்று குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்ட வேண்டுகோளை விடுத்தார்.
இராணுவ அதிகாரிகள் குழுவில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி, உக்ரைன் சுதந்திரத்திற்காக மட்டுமன்றி உலகளாவிய ஜனநாயகத்துக்காகவும் போராடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலர் இராணுவ உதவியை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காங்கிரஸிடம் கேட்டுக் கொண்டார், ஆனால் அந்த கோரிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டன.
உக்ரைன் ஜனாதிபதியும் இந்த விஜயத்தின் போது சபாநாயகர் மைக் ஜோன்சனைச் சந்தித்து இராணுவ உதவிக்கான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார்.