கடந்த வாரம் முதல் வேகமாக அதிகரித்து வரும் முட்டையின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படும் என நுகர்வோர் வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இப்போது முட்டை வியாபாரிகள் முட்டைகளை பதுக்கி வைத்துள்ளமையினால் முட்டை விலை 57-60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பதுக்கி வைத்திருக்கும் முட்டைகளை உடனடியாக சந்தைக்கு விடுமாறு கூறினேன். இல்லையேல் அந்த முட்டைகளை சந்தைக்கு விடுவதற்கு வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். எதிர்வரும் வாரத்தில் முட்டை விலையை குறைக்க தேவையான நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.