ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் இன்று (19) காலை புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, புகையிரத பாதை தடைப்படுவதால் உடரட்ட மெனிக்கே புகையிரதமும் பொடி மெனிகே புகையிரதமும் இன்று காலதாமதமாக இயக்கப்படும் என புகையிரத திணைக்களம் எமது விசாரணையில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, காலை 05.45 மணிக்கு பதுளையில் இருந்து கோட்டை வரை இயக்கப்பட வேண்டிய உடரட்ட மெனிகே ரயில் இது வரை புறப்படாமல் உள்ளது.
மேலும், காலை 08.30 மணிக்கு கொழும்புக்கு இயக்கப்படவிருந்த பொடி மெனிகே புகையிரதமும் சில மணித்தியாலங்கள் தாமதமாக புறப்படும்.
மண் மேடு மண்சரிவினால் தடைப்பட்ட புகையிரத பாதையில் மண் அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் எனவும் புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.