follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2மின்கட்டணத் திருத்தத்தில் VAT எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது

மின்கட்டணத் திருத்தத்தில் VAT எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது

Published on

ஜனவரி மாத மின் கட்டணத் திருத்தத்தில் VAT எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

ஜனவரி மாத மின் கட்டண திருத்தத்தில் ஒருபோதும் VAT தாக்கத்தை செலுத்தாது. மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நெப்தா மற்றும் நிலக்கரிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மின்சக்தித் துறைக்கு VAT பொருந்தாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

VAT வரி எரிபொருள் தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தப் பாதிப்பைத் தணிக்க நாங்கள் தற்போது ஏனைய மாற்று வழிகள் குறித்து கலந்தாலோசித்து வருகிறோம். அதன் பிரகாரம் ஜனவரியில் எரிபொருள் விலையை திருத்தவும் தயாராகி வருகிறோம். அதன்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட இடமளிக்க மாட்டோம். தற்போது தேவையான எரிபொருள் கையிருப்பு எம்மிடம் உள்ளது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த நவம்பர் மாதம் மற்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் Furnace oil அளவு குறைந்ததால், Furnace oil மற்றும் நெப்தா ஆகிய இரண்டு வகையான எரிபொருள் வகைகள் அதிகளவில் கையிருப்பில் உள்ளன. சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட்ட உற்பத்திகளினால் இலங்கை களஞ்சிய முனையத்தின் தாங்கிக் கட்டமைப்பு அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள அதிகப்படியான Furnace oil மற்றும் நெப்தாவை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் அளித்தது.

மேலும், சிலர் இந்திய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நாட்டின் சூரிய மின் நிலையங்களுடன் ஒப்பிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆனால், இந்திய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை எமது நாட்டு சூரிய மின் நிலையங்களுடன் ஒப்பிட முடியாது. இந்தியா சொந்தமாக சோலார் பேனல்களை உற்பத்தி செய்யும் நாடு. நமது நாடு சோலார் பேனல்களை உற்பத்தி செய்வதில்லை. நாம் அனைத்தையும் இறக்குமதி செய்ய வேண்டும். உற்பத்திச் செலவில் நமது இரு நாடுகளுக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. மேலும் காற்றாலை மின் உற்பத்தியில் டிரான்ஸ்மிஷன் லைன் கட்டமைப்புகளிலும் இந்த நிலைமை காணப்படுகின்றது.” என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...