48 வருட சிறைவாசம் – இறுதியில் நிரபராதி

1611

அமெரிக்காவின் ஓக்லஹாமா சிட்டியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நடந்த கொள்ளை முயற்சியில் கேரலின் சூ ராஜர்ஸ் (Carolyn Sue Rogers) என்பவர் கொலை செய்யப்பட்டர்.

இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் (Glynn Simmons) எனும் இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில், தான் லூசியானா (Louisiana) மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார். ஆனால், நீதிமன்றம் அவருக்கும், அவருடன் கைது செய்யப்பட்ட டான் ராபர்ட்ஸிற்கும், மரண தண்டனை வழங்கியது.

சில ஆண்டுகளில் மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பட்டது. அப்போது சிம்மன்ஸிற்கு வயது 22 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஜூலையில் இவ்வழக்கு மறுவிசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் ஓக்லஹாமா மாவட்ட நீதிமன்றம், சிம்மன்ஸ் குற்றமற்றவர் என கூறி தண்டனையை இரத்து செய்ததை தொடர்ந்து சிம்மன்ஸ் விடுதலை செய்யப்பட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here