follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1ஜனாதிபதியினால் 12 புதிய நியமனங்கள்

ஜனாதிபதியினால் 12 புதிய நியமனங்கள்

Published on

பத்து அமைச்சுகளுக்கான செயலாளர்களும் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (22) காலை இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நியமனங்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

கல்வி அமைச்சின் செயலாளராக வசந்தா பெரேரா,

நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக என். எம். ரணசிங்க,

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க

சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பி. கே. பி. சந்திரகீர்த்தி,

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன,

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க,

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக கலாநிதி தர்மசிறி குமாரதுங்க,

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ.சி. மொஹமட் நஃபீல்,

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக W.P.P.யசரத்ன,

நீர்பாசன அமைச்சின் செயலாளராக சமன் தர்ஷன பண்டிகோரள ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...