நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (22) புறக்கோட்டையில் இயங்கி வந்த காலாவதியான பால்மா விநியோக நிலையமொன்றை நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 825 கிலோகிராம் காலாவதியான பால்மா தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு விற்பனையாளர்கள் இந்த காலாவதியான பால் மாவை எடுத்துச் செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மொத்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.