எதிர்வரும் திங்கட்கிழமை (25) நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் போயா தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர விடுதிகளில் உள்ள மதுபானசாலைகள் மூடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.