இந்தியப் பெருங்கடலில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்

1936

இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகளின் எண்ணிக்கை 4 ஆகும்.

இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 அலகுகளாகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் திருமதி நில்மினி தல்தேனா தெரிவித்தார்.

முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலைத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன.

கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here