இரண்டு ஆண்டுகளில் 66 அபிவிருத்தித் திட்டங்கள்

147

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த நகர அபிவிருத்தித் திட்டங்கள் நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அந்த அதிகாரசபையால் வருடாந்தம் வழங்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 31 அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதோடு மேலும் 2023 ஆம் ஆண்டில் 12 அபிவிருத்தித் திட்டங்கள் மட்டுமே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் வருடத்திற்கு 22 அபிவிருத்தித் திட்டங்களின் 163 திட்டங்களைத் தயாரிப்பதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு இலக்கு வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக கொழும்பு மற்றும் மேல மாகாண பிரதேச மாநகர திட்டம்> ஹம்பாந்தோட்டை மாநகர திட்டம்> கிழக்கு மாகாண சுற்றுலா வலயம் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக நுவரெலியாவை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கான பெரிய கண்டி திட்டமும் இவ்வருடத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

2024 – 2026 ஆகிய இரண்டு வருடங்களில் 66 அபிவிருத்தி திட்டங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here