இது VAT வரியல்ல, ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரி.

343

தற்போது விதிக்கப்பட்டுள்ள VAT வரி உண்மையில் VAT அல்ல என்றும், மாறாக ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரி என்றும், ஊழல் மிக்க ஆட்சியாளர்கள் ஒவ்வொரு துறையிலும் திருடிய பிறகு நாடு வங்குரோத்தானது என்றும், இந்த வங்குரோத்து நிலையில், ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தை மீட்பதற்கு பதிலாக, ஊழல் வாதிகளை பாதுகாத்துக் கொண்டு,நாடு இழந்த பணத்தை மக்களை ஒடுக்கி பெறப்பட்டு வருவதாகவும், எனவே இந்த வற் வரியை ஊழல் நிறைந்த வரி என்று அழைக்கலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 62 ஆவது கட்டமாக மினுவாங்கொட நெதகமுவ கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here