வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
1000க்கும் குறைவான இயந்திரத் திறன் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அண்மைய நாட்களில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்கு மாற்று வழியை பயன்படுத்தாவிட்டால் தொழில்துறை வீழ்ச்சியடையும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.