சஜித்தின் சகோதரி போலி பணத்துடன் சிக்கிய போது அவரைக் காப்பாற்றியது முன்னாள் ஜனாதிபதி

229

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நற்பெயரை பெறும் நோக்கில் பாராளுமன்றத்தில் உரைகளை நிகழ்த்தி வருவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரை மட்டும் பேச அனுமதிப்பதன் மூலம் அவர் சொல்வதே பிரபலமாகிவிடும் என அமைச்சர் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார். இது மிகவும் தவறான நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றம் இன்று (11) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உரைக்கு பதிலளிக்கும் போதே ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு நடைபெற்ற உரையாடல் பின்வருமாறு:

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டில் ஒரு சிறு பிள்ளையில் இருந்து அனைவரின் வாழ்க்கையும் அழிந்து கொண்டிருக்கும் போது முன்னாள் ஜனாதிபதி துறைமுகத்தில் இரண்டு கப்பல்களை எடுத்துக்கொண்டு நடுக்கடலில் விருந்து வைப்பது எப்படி? எனக்கு பதில் சொல்லுங்கள். அதை செய்ய முடியாது.

ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ.பெ.) – சபாநாயகர் அவர்களே எதிர்க் கேள்வியொன்றை கேட்க எதிர்க்கட்சித் தலைவர் அனுமதி பெற்றுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சுற்றுப்புறத்தை தொடர்புபடுத்தி பேசும் போது நேர பிரச்சினை எழுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பேச்சுக் கொடுப்பதை விட, சம்பந்தப்பட்ட விஷயத்தைப் பற்றி பொறுப்பான அமைச்சரிடம் கேள்வி கேட்பது நல்லது. பொதுமக்களின் பணம் விரயம் செய்யப்பட்டிருந்தால், அதை முறையாக கையாளுங்கள். நல்ல பெயரை எடுக்க பேச்சுக் கொடுக்கிறார். சும்மா மூன்றாம் வகுப்பில் மட்டும் வேலை செய்யாதீர்கள் எதிர்க்கட்சித் தலைவரே.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – சபாநாயகர் அவர்களே, நான் என்னைப் பற்றியோ, எனது குடும்பத்தினரைப் பற்றியோ அல்லது என்னுடன் தொடர்புடைய வர்த்தகங்களைப் பற்றியோ பேசவில்லை. எனவே தயவுசெய்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். என் வாயை மூடாதீர்கள்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன – எனக்கு உங்கள் வாயை மூட வேண்டிய அவசியம் இல்லை.. நேரம் முக்கியம்.

(சபையில் கூச்சல்;)

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – சபாநாயகர் அவர்களே, என்னையும் பேச அனுமதியுங்கள்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன – இல்லை.. நீங்களும் உட்காருங்கள்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ.பெ.) – எதிர்க்கட்சித் தலைவர் அனுமதிக்கப்படும் போது, அவர் பேசுவது மாத்திரம் பிரபலமாகும். இது தவறு. எங்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோரைப் பற்றி பேசுகிறார். உங்கள் சகோதரி திருடப்பட்ட பணத்துடன் பிடிபட்டபோது முன்னாள் ஜனாதிபதியே காப்பாற்றினார். இது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்தது. மேலும் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தவர் உங்கள் தந்தை. அதைப் பற்றியும் பேசலாம்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here