உக்ரைன் தெற்கு பகுதியில் ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 65 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானத்தில் 74 பேர் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும், இந்த விமானத்தில் 65 உக்ரேனிய போர் கைதிகள் இருந்ததாகவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.