பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் 75வது குடியரசு தின விழாவில் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இந்திய பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர், பிரதமர் மோடியின் சிறப்பு அழைப்பின் பேரில் அவர் இந்தியா வந்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் ஜெய்ப்பூரில் நடக்கும் பல கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தயாராக உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரான்சில் நடந்த பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.