சனத் நிஷாந்தவின் தேகம் இன்று புத்தளத்திற்கு

880

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

பொது அஞ்சலிக்காக நேற்று (25) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், இன்று(26) காலை 10.30 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வரும் 28-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் பயணித்த கண்டெய்னரில் மோதி பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சனத் நிஷாந்த இறக்கும் போது அவருக்கு வயது 48.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here