பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு சந்தேகநபரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் காலி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா எனும் ரோயல் பீச் சமன் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
காலி பிரதேசத்தில் வசிக்கும் 25 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது, அவர்களிடம் இருந்து 09 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின், மோட்டார் சைக்கிள், 03 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கூரான கத்தி என்பன காணப்பட்டன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
22.01.2024 அன்று, சமன் பெரேரா (றோயல் பீச் சமன்), உள்ளிட்ட ஐவரை சுட்டுக் கொல்ல, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ஊரகஹ மைக்கல் உடன் இணைந்து தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் தாக்குதல் நடத்தவும் இந்த சந்தேகநபர்கள் திட்டமிட்டதாகவும், கொஸ்கொட சுஜீ இனால் குறித்த மைக்கல் இற்கு இந்த கொலைக்கான ஒப்பந்தத்தினை வழங்கியதாக குறித்த சந்தேக நபர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.