கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலில் அழுகிய மீன்கள்

1467

சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்கள் கரிம உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி இந்த நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்கு குழுவில் தெரியவந்துள்ளது.

கப்பலை இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை பிரதிநிதிக்கு சொந்தமான செமண் தொழிற்சாலை உள்ளதாகவும், கப்பலில் இருந்த கெட்டுப்போன மீன்கள் அடங்கிய 04 கொள்கலன்களுக்கும் என்ன நடந்தது என தெரியவரவில்லை எனவும் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அரச கணக்குகள் தொடர்பான குழுவின் தலைவரான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here