follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு4 வயதுடைய குழந்தைகளில் 30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை

4 வயதுடைய குழந்தைகளில் 30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை

Published on

நாட்டில் 4 வயது பூர்த்தியான குழந்தைகளில் 30% வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி மிகவும் முக்கியமானது எனவும் உலகில் இது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் சுமார் 6000 முன்பள்ளி டிப்ளோமாதாரிகள் இருப்பதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பயிற்சியற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்காக கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்படும் இந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், 2025ஆம் ஆண்டு முதல் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படுமானால், முதலாம் தரத்திற்குச் செல்லும் குழந்தைகளின் முன் குழந்தைப் பருவ வளர்ச்சியையும் அதற்கு ஏற்ற வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் சிறை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

சுகயீன விடுப்பு அறிக்கை மூலம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள்...

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரிக்கை

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வெசாக் போயா தினமன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...