பகிடிவதை செய்த மாணவர்களுக்கு பிணை

201

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (29) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 6 மாணவர்களும் ஒரு மாணவியும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 14 ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here