யாழ். காங்சேன்துறையிலிருந்து தமிழகத்தின் நாகப்பட்டினம் வரையிலான பயணிகள் படகு சேவையை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.