நாட்டில் கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்க முடியாவிட்டாலும் மக்களை அடக்குவதற்காக கண்ணீர் புகை, இரப்பர் தோட்டாக்கள், நீர் தாரை தாக்குதலை நடத்தும் இயந்திரம் வாங்குவதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் வழங்கப்பட்ட மதிய உணவைக் கூட வழங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லாவிட்டாலும், மக்கள் அடக்குமுறைக்குட்படுத்த பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பாடசாலை மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
31 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போக்குவரத்து வீதி ஒழுங்குத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசாங்கம் இவ்வாறு செய்யும் போது, 31 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையிலும் அதன் பிறகும் ஐக்கிய மக்கள் சக்தி மாத்தறை, காலி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் தொடர்ச்சியாக 17 பாடசாலைகளுக்கு 17 ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைக்கவுள்ளது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய குழு யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். இன்று 220 இலட்சம் மக்களும் நாட்டில் நிலவும் பொருளாதார, சமூக, அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்காக காத்திருக்கின்றனர்.இவ்வாறான தீர்வுகளை வழங்கக்கூடிய குழு யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.