follow the truth

follow the truth

August, 1, 2025
HomeTOP3புதிய உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நன்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்

புதிய உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நன்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்

Published on

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உயர்ஸதானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.

இன்று நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு,

01- மென்சி சிபோ டிலாமினி – எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர்
Mr. Menzie Sipho Dlamini High Commissioner of the Kingdom of Eswatini)

02- ஸ்டெலுடா அர்ஹைர் – ருமேனியா தூதுவர்
Ms. Steluta Arhire Ambassador of Romania

03- அஸ்கர் பெஷிமோவ் – கிரிகிஸ் குடியரசின் தூதுவர்
Mr. Askar Beshimov Ambassador of the Kyrgyz Republic

04- ஷலர் கெல்டினசரோவ் – துர்க்மெனிஸ்தானின் தூதுவர்
Mr. Shalar Geldynazarov Ambassador of Turkmenistan

அதனையடுத்து இன்று நியமனம் பெற்ற உயர்ஸ்தானிகரும் தூதுவர்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...