‘நான் உயிரோடு இருக்கிறேன்’ – இறப்பு நாடகம் குறித்து பூனம் பாண்டே விளக்கம்

798

பூனம் பாண்டே இறந்துவிட்டதாக அவரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று அவரது குழுவினர் பதிவிட்டு இருந்தனர்.

குறித்த பதிவில், “ எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கர்ப்பப்பை புற்றுநோயால் இழந்துவிட்டோம் என்பதைத்ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று
பூனம் பாண்டேவின் குழு நபர்கள் அதிகாரப்பூர்வமான தெரிவித்தனர். இதனையடுத்து அவரது மறைவுக்கு ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று பூனம் பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் இறக்கவில்லை என்றும், கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காகவே இப்படியான செயலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது இன்ஸ்டா பதிவில்,

முக்கியமான ஒன்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் – நான் இங்கே இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். எனக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லை. இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல ஆயிரக்கணக்கான பெண்கள் உயிரிழந்துள்ளனர். மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது. HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகளில் முக்கியமானது. இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் நம்மிடம் உள்ளன. விழிப்புணர்வுடன் ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here